2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னாரில் சுமார் 2 கோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரையே தலைமன்னார் பகுதியில்  கைதுசெய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து தலைமன்னார் பொலிஸாரும் மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸாரும் இணைந்து இந்நபரை நேற்று சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவரிடமிருந்து 2 கிலோ 250 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 2 கோடி 25 இலட்சம் ஆகும் எனவும் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் தலைமன்னார் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .