2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

உழவு இயந்திரத்தின் பாகங்களை திருடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 01 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

உழவு இயந்திரமொன்றின் பாகங்களை திருடியதாகக் கூறப்படும் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து முச்சக்கரவண்டியொன்றையும் திருடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை,  மத்திய முகாம் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் முன்பாக  நிறுத்திவைக்கப்பட்டிருந்த  உழவு இயந்திரத்தின் பாகங்களே நேற்று திங்கட்கிழமை இரவு திருடப்பட்டுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்

உழவு இயந்திரத்தின் ரயர்கள், கலப்பை ஆகியவற்றை திருடியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

முச்சக்கரவண்டியொன்றை சோதனையிட்டபோது திருடப்பட்டதாகக் கூறப்படும்  உழவு இயந்திரத்தின் பாகங்கள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திருடப்பட்ட பாகங்களை விற்பனை செய்வதற்கு முச்சக்கரவண்டியில் எடுத்துச்செல்வதாக முச்சக்கரவண்டிச் சாரதி வழங்கிய தகவலையடுத்து சாரதியுடன் மற்றைய நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்;.

இது தொடர்பான மேலதிக விசாரணையை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .