2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மதுபானசாலையில் கொள்ளை

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பொகவந்தலாவை நகரிலுள்ள மதுபானசாலை ஒன்றில் இன்று அதிகாலையில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுபானசாலையின் முன்பக்கக் கதவினை இனந்தெரியாத குழுவொன்று உடைத்து மதுபானசாலையிலிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான மதுபான வகைகள் இதன்போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .