2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஜமுத்துக்களை விற்பனைக்காக வைத்திருந்த நான்குபேர் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.எம்.ரிக்பாத்)
பெறுமதிமிக்க இரண்டு கஜமுத்துக்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்குபேர் வத்துகாமம் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்களில் இராணுவ வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்துகாமம் நகரில் வாகன சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கர வண்டியொன்றினை மறித்தபோது அதில் நால்வர் சந்கேகத்திற்கிடமான முறையில் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது கஜமுத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸார் மேற்படி நான்கு பேரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .