2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தாண்டிக்குளம் ரயில் பாதையிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா, தாண்டிக்குளம் பகுதி ரயில் பாதையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

தாண்டிக்குளம் பகுதி ரயில் பாதையில் ஒருவர் படுத்தவாறு இருப்பதை அவதானித்த ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி ரயிலின் சாரதி, ரயிலை நிறுத்தி வந்து பார்த்தபோது சடலம் காணப்பட்டது.

பின்னர் இந்த சடலம்   மீட்கப்பட்டுள்ளது.

இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .