2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இராணுவ வீரரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பிரியந்த ஹேவகே,நவரத்தினம்

வவுனியா, நாவற்குளம் கிராமத்திலுள்ள பற்றைக் காட்டிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம்  உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.பிரியந்த குமார (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டவராவார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் இவர் பூநாவை பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையில் இருந்தாரெனவும்  மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி காணாமல் போயிருந்தாரெனவும் இது தொடர்பில் இவரது தாயார் இம்மாதம் 6ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .