2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காதலியை கொன்ற காதலனை தேடி வலைவீச்சு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.சீ.சபூர்தீன்                   

தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய காதலன் தொடர்பில் கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதகள, விஸ்ஸவெல பகுதியைச் சேர்ந்த பகுதியிலேயே நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதி (25 வயது) தனது வீட்டில் இருந்த வேளையில்  வீட்டுக்குள் நுழைந்த காதலன் யுவதியைப் பலமாகத் தாக்கி வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சம்பவ நேரத்தில் வீட்டில் வேறு எவரும் இருந்திருக்கவில்லை. சம்பவம் தொடர்பாக அயல் வீட்டுக்காரர்கள் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறே இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துவதற்காக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .