2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கடையொன்றில் திருடிய இராணுவ வீரர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எப்.எம். தாஹிர்

பண்டாரவளை எல்லஹெல ஹல்பே பகுதியிலுள்ள கடையொன்றில் திருட்டில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம், நேற்று மலை இடம்பெற்றுள்ளது.

தியதலாவ இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர் கடமை முடிந்து வீடு திரும்பியபோது  இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இதன்போது  பிரதேசவாசிகள் பிடித்து அந்நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை இன்று பண்டாரவளை நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .