2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

கஞ்சா வைத்திருந்த  குற்றச்சாட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த மூவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மேற்படி மூவரும் ஒல்லிக்குளம் 5ஆம் கட்டை சந்தியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி நோக்கி சென்ற கார் ஒன்றை சோதணை செய்த பொலிஸார் காரின் ஆசனத்திற்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கைப்பற்றியதுடன் காரை செலுத்தி வந்த நபரையும் மற்றும் அக்காரினுள் இருந்த ஏனைய இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மேற்படி மூவரும் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்.
இதன்போது இம்மூவரையும் இன்று வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .