2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் முச்சக்கரவண்டிச் சாரதியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 28 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன், ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறையில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் வெட்டுக் காயங்களுடன் இன்று திங்கட்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மல்வத்தை 2ஆம் பிரிவு புதுநகரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி பிரேமநாதன் (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.

அம்பாறை,  மல்லிகைத்தீவு மயானத்திற்கு அருகிலுள்ள வீதியிலிருந்து இம்முச்சக்கரவண்டிச் சாரதி கைகள் மற்றும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  அவரின்  மோதிரமும் கையடக்கத் தொலைபேசியும் பணப்பையும் திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

இவர் மல்வத்தை பிரதேசத்திலுள்ள தனது வீட்டிலிருந்தபோது, முச்சக்கரவண்டியை வாடகைக்காக வருமாறு இவரது கையடக்கத் தொலைபேசிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் அழைப்பொன்று வந்துள்ளது. இந்நிலையில்,  முச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு மல்லிகைத்தீவு பிரதேசத்திற்குச் சென்ற இவர்; நீண்டநேரமாகியும்  வீடு திரும்பவில்லையெனவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கூறினர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .