2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 30 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இப்பகுதியில் இடம்பெற்ற பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை வைத்திருந்த ஆண்கள் நால்வர், அப்பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை தாக்கி அவர்களிடம் கொள்ளையிடுவதற்கு முயன்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரைக் கண்ட ஆயுததாரிகள் தப்பியோடுவதற்காக முயற்சித்தபோது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே  33 வயதான ஒருவர் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.    

ஏனைய 3 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். (சனத் டெஸ்மன்ட்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .