2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 31 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வவுனியா, தாண்டிக்குளத்தில் டிப்பர் ரக வாகனமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிரிவந்துடுவ, கொஸ்வத்தையை சேர்ந்த சமந்த இந்திக்க பெரேரா (வயது 40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு நேற்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து  தாண்டிக்குளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்திலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .