2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கைத்துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 20 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்,-எஸ்.எம்.மும்தாஜ்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் இராகமை மற்றும் வென்னப்புவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த சந்தேக நபர்கள்  பல்வேறு  கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதற்கு முன்னரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .