2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திருடப்பட்ட பசுக்களை விலைக்கு வாங்கியவர் கைது

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருடப்பட்ட பசுக்கள் மூன்றை விலைக்கு வாங்கிய நபர் ஒருவரை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி உத்தரவிட்டார்

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமண பன்னலகம பிரதேசத்திலிருந்து 3 பசுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை திருடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அக்கரைப்பற்று சின்னப்பனங்காட்டு பிரதேசத்தில் குறித்த பசுக்கள் இருப்பதாக உரிமையாளருக்கு கிடைத்த தகவலையடுத்து, உரிமையாளர் தமண பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து திருடப்பட்ட பசுக்களை விலைக்கு வாங்கிய நபரை பொலிஸார் கைதுசெய்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை பசுக்களை திருடி விற்பனை செய்த பன்னலகம பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை தமண பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .