2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கைகலப்பில் ஒருவர் படுகாயம்; சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடிப் பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இக்ஹோட்டலுக்கு நேற்று புதன்கிழமை இரவு மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவருக்கும்  கடை உரிமையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதன்போது கடை உரிமையாளர் படுகாயமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தலையில் படுகாயமடைந்த கடை உரிமையாளர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு இளைஞர்களில் ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றைய இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .