2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தகராறில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஞ்சன்,-எஸ்.சுவர்ணஸ்ரீ

தலாவக்கலை, வட்டக்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட தகராறு  காரணமாக 19 வயது இளைஞர் ஒருவர் விக்கெட் கம்பினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுகுமாரன் பார்த்தீபன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வட்டக்கொடை பிரதேசத்தைச் இளைஞர்களும்  மடக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் வட்டக்கொடை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதன்போது  இந்த இரு  பிரதேசங்களையும்; சேர்ந்த இளைஞர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில், இது சமாதானமாக முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பிற்பகல் மடக்கும்புர பிரதேச இளைஞர்கள் வட்டக்கொடை பிரசேத்திற்குச் சென்று திரும்பும் வழியில் இடையில் இளைஞர்கள் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த மடக்கும்புர பிரதேச இளைஞர்கள் இருவரும்  லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களில் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து வட்டகொடை பிரதேசத்தில் பதற்ற நிலைமை காணப்பட்டதால் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .