2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கைகலப்பில் ஒருவர் கொலை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்;பட்ட பெரிய பண்டிவிருச்சான் கிராமத்திலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்தனர். 

பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் பிரான்சிஸ் (வயது 52), யூட் சகாயதாசன் (வயது 35) ஆகிய இருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால்; ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மற்றையவர் தற்கொலை செய்துள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை மடு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .