2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இரு இளைஞர்கள் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் வெட்டுக்குளம் பகுதியில் ஒரு சம்பவமும்  புத்தளம் - அநுராதபுர வீதியின் 2ஆம் மைல் கல் பகுதியில் மற்றுமொரு சம்பவமும்; நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த 2  சம்பவங்களும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை எனத் தெரிவித்த பொலிஸார், தனிப்பட்ட பிரச்சினைகளே இந்த இளைஞர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறினர்.

படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த 2 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .