2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மான், முதலை தோல்களுடன் பெண் கைது

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா.சரவணன்

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் கஞ்சா மற்றும் மான்தோல், முதலைத்தோல் போன்றவற்றை வைத்திருந்த பெண் ஒருவரை   புதன்கிழமை (4) மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்

26ஆம் கொலனிப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்தி பெண்ணின் வீட்டை சோதனை செய்த பொலிஸார்,  22 கிராம் கஞ்சா,  கஞ்சா செடிகள் 15 மற்றும்  மான்தோல், முதலைத்தோல் ஆகியவற்றை கைப்பற்றியதுடன் மேற்படி பெண்ணையும் கைதுசெய்தனர்.

மத்தியமுகாம் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித், ஜைஃஎம்.ஜவாகீர், விஜத, சோமரட்ண, அசோக்க ஆகிய பொலிஸார் இச்சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் மத்திய முகாம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகினற்னர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .