2025 ஜூலை 23, புதன்கிழமை

வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய மூவர் கைது

Kogilavani   / 2012 மே 22 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)
மாவனெல்லையில் கடத்தப்பட்ட வர்த்தகரின் குடும்பத்தினிரிடமிருந்து 2.5 மில்லியன் ரூபா கப்பம் கோரியமைக்காக கொழும்பு குற்றப்பிரிவினரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி வர்த்தகர், தொழில் விடயம் காரணமாக தனது வாகனத்தில் சென்றபோது கடந்த வாரம் மாவனெல்லையில் கடத்தப்பட்டார்.

இதன்பின் சிலர் 2.5 மில்லியன் ரூபாய் கொடுத்தால் இவர் விடுவிக்கப்படுவார் என அவரது குடும்பத்தினரக்கு தகவல் அனுப்பினர்.
கடத்தப்பட்டவரின் குடும்பத்தினர் இதை பொலிஸாருக்கு அறிவித்தனர்.

குற்றவியல் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய,  பணத்தை பெற்றுக்கொள்ள மாவனெல்லையின் குறித்த ஒரு இடத்துக்கு வருமாறு குடும்பத்தினர் சந்தேக நபர்களிடம் கூறினர்.

இதன்படி மாவனெல்லையில் குறிப்பிட்ட இடத்துக்கு பணம் பெறுவதற்காக வந்த மூவரை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.

கடத்தப்பட்டவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடத்தியவர்களால் துன்புறுத்தப்படவோ தாக்கப்படவோ இல்லையென பொலிஸார் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட  மூவரும் கண்டியில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .