2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ரூ.300 இலட்சத்துக்கு பளிங்குக் கூறுகளை விற்க முயன்ற நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 01 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.எம்.ரிஃபாத்)

தொல்பொருள் பெறுமதிமிக்க நினைவுத்தூபியிலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் அரிய பளிங்குக்கூறுகள் இரண்டை 300 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வரை பலகொல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி பளிங்குக் கூறுகளை விற்பனை செய்வதற்காக வான் ஒன்றில் சிலர் கண்டியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரியவகை பளிங்குக்கூறுகள் சுமார் 20 கிலோகிராம் நிறையுடையவை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .