2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

JMI அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள, ஜமாஅத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, சந்தேக நபர்கள் மூவரும் அம்பாறை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்கள் மூவரும், மொஹமட் சஹ்ரானிடம் பயிற்சி பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .