Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெரணியகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்வெல-மாலிபொட பகுதியில் நேற்று முன்தினம்(25) இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான தோட்டமொன்றில் ஒழிந்திருந்த போதே சந்தேகநபர் இன்று(27) அதிகாலை 5.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ரங்வெல-மாலிபொட பிரசேத்தைச் சேர்ந்த 27 வயதானவர் என்றும்,இவர் இன்றைய தினம் அவிசாவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரணியகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருந்ததுடன்,மற்றுமொரு ஆணின் சடலமும் குறித்த கொலையுண்ட பெண்ணின் வீட்டிலிருந்து 60 மீற்றர் தூரத்திலிருந்து மீட்கப்பட்டது.
மேலும் கொலையுண்ட பெண்ணின் 4 மற்றும் 7 வயதான பிள்ளைகள் தாக்குதலுக்கு இலக்காகி அவிசாவலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025