2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இளைஞனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

Kanagaraj   / 2016 மார்ச் 15 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டியவில் விருந்துபசாரத்தின் போது இடம்பெற்ற அசம்பாவிதத்தினால் மரணமடைந்த சுமித் பிரசன்ன என்ற  இளைஞனின் சடலம், இன்று செவ்வாய்க்கிழமை காலை தோண்டி எடுக்கப்பட்டது.

எம்பிலிப்பிட்டிய நீதவான் பிரசன்ன பெர்ணான்டோவின் முன்னிலையிலேயே, சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

சடலத்தை இளைஞனின் அம்மாவும், சகோதரனும் இனங்காட்டினர்.
சடலம் தோண்டி எடுக்கப்பட்டபோது சட்ட வைத்திய அதிகாரியும் பிரசன்னமாய் இருந்தார். அத்துடன், பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .