2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இளம் ஜோடி உட்பட மூவர் பலி

Gavitha   / 2016 மே 11 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இருவேறு ரயில் விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

வெள்ளவத்தை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (11) முற்பகல் 10 மணியளவில் இளம் ஜோடியொன்று மோதுண்டதில், அவ்விருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

நுவரெலியாவைச் சேர்ந்த சுப்ரமணியம் கமலநாதன் (வயது 24) மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஆர்.மஹேசிகா (வயது 25) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று வெள்ளவத்தைப் பொலிஸார் கூறினர். இவர்களது சடலங்கள், களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சாகரிக்கா ரயிலில் மோதியே, இவ்விருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், இவர்கள் ரயிலில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்ததாகவும் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர். 

இதேவேளை, பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மற்றுமொரு ரயிலில் மோதி, 30 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பான விவரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் இந்த விபத்து, இரத்மலானை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது என்றும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரத்மலானைப் பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X