2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உள்ளாடைகள் கள்வன் சிக்கினான்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழுவிய மற்றும் கழுவப்படாத, பெண்களின் உள்ளாடைகளை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார், பெண்களின் உள்ளாடைகள் அடங்கிய இரண்டு மூடைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பண்டாரவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவரே, முல்லேரியா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வயரிங் செய்பவர் போல தன்னை அறிமுகப்படுத்திகொண்ட அவர், சுமார் 14 வீடுகளில் இவ்வாறு உள்ளாடைகளை களவெடுத்துள்ளார்.

மஹரகம, மல்வானை, பிலியந்தலை மற்றும் வெலிவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில், கழுவி காயபோட்டிருக்கும் அல்லது கழுவாமல் வைத்திருக்கும் பெண்களின் உள்ளாடைகளையே இவர் களவெடுத்துள்ளார்.

இதேவேளை, மேற்குறிப்பட்ட பகுதிகளில் களவெடுத்த சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், பல்வேறுபட்டவர்களிடம் விற்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .