2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மூவர் கொலை

George   / 2016 ஜூலை 25 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று வெவ்வேறு சம்பவங்களில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பெண் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மீட்டியாகொடை, நவகமுவ மற்றும் அரலகங்வில ஆகிய பிரதேசங்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மீட்டியாகொடை, களுபே பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 40 வயது ஆண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நவகமுவ, துன்அத்தஹேன பிரதேசத்தில்  கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டு 45 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

அதனைத்தவிர அரலகங்வில, தலுகான பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 62 வயதான பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மூன்று கொலை சம்பவங்கள் தொடர்பிலும் அந்தந்த பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .