2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கூரிய ஆயதத்தால் தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலிஎல, ருகதென்ன வத்தை பழைய பிரிவில், கூரிய ஆயதத்தால் தாக்கி தந்தையை கொலை செய்த சந்தேகத்தில் 16 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது போதையில் வந்த தந்தை, தாய் மீது தாக்ககுதல் மேற்கொண்டதால் கோபமடைந்த மகன், தற்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 வயதுடைய தந்தையேஉயிரிழந்துள்ளார். சந்தேகநபரான மகன், கொழும்பில் பணிபுரிவதாகவும் திருவிழா நிகழ்வில் கலந்துக்கொள்ள வீட்டுக்கு வந்திருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .