2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

கடைக்குச்சென்ற பெண்ணுக்கு கத்திக்குத்து

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கடையொன்றில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருர் மீது, இனந்தெரியாத நபரொருவர் கத்திக்குத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவமொன்று, சாவகச்சேரி நாவற்குழிச் சந்தியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த மோகன் சத்தியவதனி (வயது 28) என்பவர் மீதே, மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கையில் காயமடைந்த அப்பெண், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X