2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கடத்தப்பட்ட இளைஞன் மீட்கப்பட்டான்

Kanagaraj   / 2016 மே 15 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 கோடி ரூபாயை கப்பமாக கேட்டு, இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இளைஞனை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன், வாரியபொல பகுதியில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் நிக்கவரெட்டிய எலவக்க பிரதேத்தில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனை கடத்தியதாக கூறப்படும், இருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களில் ஒருவர் பிரதியேக வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர் என்றும் அறியமுடிகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இன்னும் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாரியபொலையில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மகனே இவ்வாறு கடத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .