2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கணவனை தீயிட்டு கொளுத்திய மனைவி கைது

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 61 வயதுடைய கணவனைத் தீயிட்டுக் கொளுத்திக் கொலை செய்ய குற்றசாட்டில் மனைவியொருவர், கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடுமையான தீக்காயங்களுடன், சூரியவெவ வைத்தியசாலையில் கணவனை அனுமதித்த போதும், அவர் உயிரிழந்துவிட்டாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட கருணாசேன வன்னிகம என்பவரே, தனது மனைவிதான் தன்னைத் தீயிட்டுக் கொளுத்தியதாக, வைத்தியர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவியைக் கைதுசெய்துள்ள சூரியவெவ பொலிஸார், அவரை, ஹம்பாந்தோட்டை நீதான் நீதிமன்றத்தில் இன்று (05) ஆஜர்படுத்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .