2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

கத்திக் குத்து: மூவர் காயம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

பண்டாரவளை, சென்.கத்தரின் தோட்டத்தில், திங்கட்கிழமை (07) இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் கத்திக் குத்துக்குள்ளான மூவர், தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த எம்.ரஜீவ், எஸ்.சசிதரன் மற்றும் எம்.கிசாந்தன் ஆகிய மூவருமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் ஒருவரது நிலைமை, கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X