2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கள்ளக் காதலியின் பிள்ளைகளை கொன்றவருக்கு மரண தண்டனை

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய கள்ளக் காதலியின் பிள்ளைகள் இருவரையும் வெட்டி கொத்தி கொலைச் செய்ததுடன், கள்ளக்காதலியையும் வெட்டி காயப்படுத்தியவருக்கு இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எம்பிலிப்பிட்டிய பனாமுரவை வசிப்பிடமாகக் கொண்ட, 23 வயதான இளைஞனுக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தன்று, குற்றவாளியை சட்டபூர்வமாக திருமணம் முடித்திருந்த பெண்ணும், அப்பெண்ணின் உறவினர்களும் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எம்பிலிப்பிட்டிய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி எச்.எம்.ஆர் அனுரகுமாரவே, இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கள்ள உறவு, 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 4ஆம் திகதியன்று அம்பலமானதால், கோபமடைந்த அந்த நபர், தன்னுடைய கள்ளக்காதலியின் பிள்ளைகளான திமுது குலதுங்க (வயது 12), மனத்தலாகே ரவீஷ மகேஸ் ஆகிய இருவரையும் வெட்டி படுகொலை செய்தார்.

இதேவேளை, அவருடைய கள்ளக்காதலியையும் அவர் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம், எம்பிலிப்பிட்டிய கொலன்கஸ்யாய பகுதியிலேயே இடம்பெற்றது.

சம்பவத்தையடுத்து, தலைமறைவாகியிருந்த நபர், கொடகவெல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு எதிராக படுகொலை வழக்கை பதிவு செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .