2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

காதலியை தேடிச்சென்ற காதலனுக்கு வெட்டு

Editorial   / 2018 ஜனவரி 13 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலைபேசியில் அறிமுகமான காதலியின் வீட்டைத் தேடிச்சென்ற, காதலன் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று, அவிசாவளையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞனின் அலைபேசிக்கு, இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர், ஓர் இலக்கத்திலிருந்து தவறவிட்ட அழைப்பொன்று வந்துள்ளது. அவ்விலக்கத்துக்கு அந்த இளைஞன், அழைப்பை ஏற்படுத்தி பார்த்துள்ளார். மறுமுனையில் யுவதியொருவர் பதிலளித்துள்ளார்.

அந்த தவறவிட்ட அழைப்பு, ஒவ்வொருநாளும் தவறாத அழைப்பாகின. இதனால், இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அலைபேசியில் அறிமுகமான இவ்விருவரும், நேரடியாக சந்தித்துகொள்வதற்குத் தீர்மானித்தனர்.

அதனடிப்படையில், தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விலாசத்தை அனுப்பிவைத்துள்ளார் அந்த யுவதி. தன்னுடைய காதலி கூறியதன் பிரகாரமே, அவிசாவளையில் உள்ள காதலியின் வீட்டுக்கு கடந்த 9 ஆம் திகதியன்று முச்சக்கரவண்டியில், அவ்விளைஞன் இரவு வேளையில் பயணித்துள்ளார்.

அந்தப்பிரதேசத்தில் குறுக்கு வீதியில் சென்றுகொண்டிருந்த போதே, இனந்தெரியாத நபர்கள் அவ்விளைஞனை கூரிய ஆயுதங்களால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர் இதனால், பாதிக்கப்பட்ட அவ்விளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நாபாவல பிரதேசத்திலிருந்து பாதுக்கை பிரதேசத்துக்கு வசிப்பதற்கு சென்றிருந்தவரே இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். அத்துடன், காதலனின் அலைபேசியும் பறிக்கப்பட்டுள்ளது.

காதலியின் வேண்டுகோளுக்கு இணங்க, வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கரவண்டியிலேயே காதலன் பயணித்துள்ளார்.

இது இரவில் இடம்பெற்ற சம்பவம் என்பதனால், அதுதொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாதென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .