2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கொலை சந்தேகநபர்கள் இருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பொரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரணபால ஹிமி மாவத்தை-புகையிரத வீதிக்கு அருகில்  நபர் ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு  அதிகாரிகளால் நேற்று முன்தினம்(25) மாலை 4.25 மணியளவில் சிரிசர உயன பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு பொரல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொரல்ல பிரதேசத்தைச் சேர்ந்த  30 மற்றும் 26 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம் (27) புதுக்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறத்த கொலை சம்பவமானது கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதியன்று இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .