ஆர்.மகேஸ்வரி / 2018 ஜனவரி 11 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுர நகரிலுள்ள முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் 7 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் இன்று (11) இரகசியப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் நொச்சியாகம பிரதேசத்தின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரிடமிருந்து கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் 11 கிலோ கிராம் நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் பல மாதங்களுக்கு முன்பு திரப்பனை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட படையணி சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவர் கடந்த காலங்களில் பிரபல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புளைக் கொண்டிருந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025