2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சுபநேரத்தில் கொலை: பூசாரி கைதானார்

Kanagaraj   / 2016 மே 16 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத்சிங்கள ஹல்வத்துரே பத்திரகாளியம்மன் கோவில் பொறுப்பாளரான ஏ.ஏ. சோமதாஸவை (80) படுகொலைசெய்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்தக் கோவிலின் பூசாரியும் மட்டக்குளியைச் சேர்ந்த பழைய இருயம்புகளைச் சேகரிக்கும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலையைச்செய்வதற்கு சுபநேரம் பார்க்கப்பட்டதாகவும் அந்நேரத்திலேயே சாக்கொன்றினால் அவருடைய முகத்தை மூடிய சந்தேகநபர்கள், கழுத்தைத் திருகி அவரைப் படுகொலைசெய்துள்ளனர். படுகொலைசெய்யப்பட்டவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார்.

இந்தப் படுகொலை, 2 இலட்சம் ரூபாய், ஒப்பந்தத்துக்கு செய்யப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .