2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் கைது

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நபரொருவரை, குறித்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த இலங்கை கடற்படையினர் நேற்று (30) கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இவர் இந்தியாவுக்கு செல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர் பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரெனவும் கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .