2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சன்குட்டி சரணடைந்தார்

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

வாள்வெட்டு, கொள்ளை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு, பொலிஸாரால் தேடப்பட்ட போது தலைமறைவாகி இருந்த சந்தேகநபரான சன்குட்டி என்ற 24 வயதுடைய சந்தேகநபர், நேற்று திங்கட்கிழமை (06), மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் நீண்டகாலமாக தலைமறைவாகி வாழ்ந்து வந்த மேற்படி சந்தேகநபர், நேற்று (06) புகையிரதம் மூலம் இணுவில் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வருவதாக சுன்னாகம் இரகசிய பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.  

இணுவில் புகையிரத நிலையத்தைச் சுற்றிவளைத்து நின்ற பொலிஸாரைக் கண்டதும், சந்தேகநபர் அவ்விடத்தில் இறங்காது நேரடியாக மல்லாகத்துக்கு சென்று, மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன், மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கடந்த காலங்களில் சுன்னாகம் பொலிஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் இவரது சட்டவிரோத செயற்பாடுகள் அமைந்திருந்தன. குறிப்பாக வாள்வெட்டுக்கள், கொள்ளை நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு இருந்தார். மேற்படி நபரும் அவரது சகாக்களும் ஊரை விட்டு தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .