Editorial / 2019 ஜூலை 30 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுபொத்த பகுதியில் வைத்து, முஹமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர், சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுவதுடன், இவர் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன், நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் குறித்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025