2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி மற்றும் ரவைகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், 37 வயதான சந்தேகநபரை, மிரிகானை, பெல்லத்தர சந்திப்பகுதியில் வைத்துக் கைதுசெய்துள்ளனர். இக்கைதுச் சம்பவம், சனிக்கிழமை (03) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் துப்பாக்கி மற்றும் ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர், பொரலெஸ்கமுவ பகுதியில், வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என தெரியவந்துள்ளது.

 நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .