George / 2016 ஜூன் 04 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தவறான உறவு வைத்திருந்த தாய் - மகன் ஆகியோரை இன்று சனிக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொறவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான தாயும் 28 வயதான மகனுமே தகாத உறவு வைத்திருந்த சந்தேகத்தில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கணவனை பிரிந்த நிலையில், கணவரின் உறவினரின் வீட்டில் வசித்து வந்த தாய், கந்தளாய் பிரதேசத்தில் வசித்து வந்த தனதுமகனுடன் தவறான உறவு வைத்துள்ளார்.
பின்னர், தனது மகனுடன் சேர்ந்து மொறவெவ பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.
தாய் - மகனுக்கு இடையிலான தவறான உறவு குறித்து உறவினரால் கணவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, தாயும் மகனும் வீட்டை விட்டு வெளியேறிச்சென்று தனியான வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
இதுகுறித்து, கணவனின் உறவினர் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், இருவரையும் கைது செய்து திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அதனையடுத்து, சந்தேகநபர்களான தாய் - மகனை 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
எனினும், இவர்களை பிணையில் எடுக்க யாரும் இல்லாததால் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
21 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
2 hours ago