2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (13) பகல் வத்தளை- ஹேக்கித்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்களென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காரொன்றில் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களுள் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் மதி ​என்ற பெயரால் அழைக்கபடுபவரென்றும் குறித்த இருவருடனும் பயணித்த ஸ்டீவன் ராரேந்திரனின் உறவினர்  பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேலும் கொட்டாஞ்சேனை- செல்லையா தோட்டத்தில் இடம்பெற்று வரும் ஹெரோய்ன் போதை வர்த்தகம் தொடர்பில் இரு குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .