Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மார்ச் 08 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவை, வவுலகொட பகுதியில் வீடொன்றில் நடைபெற்ற கொள்ளை ஒன்றுடன் தொடர்புள்ள சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர், கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி, வெளிநாட்டுப் பெண்ணொருவர் தங்கியிருந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று, சுமார் 760,000 ரூபாய் பணத்தையும், 2 ஏடிஎம் அட்டைகள் மற்றும் பல பெறுமதிமிக்க பொருட்களையும் கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நபர் இருக்கும் இடம் பற்றித் தெரியவந்தால் அது பற்றி பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். S
ஹிக்கடுவை பொலிஸ் பொறுப்பதிகாரி: 0718591457
ஹிக்கடுவை பொலிஸ் நிலையம்: 0912277222
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .