2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பிறந்தமேனியுடன் திரிந்த பெண் கைது

Menaka Mookandi   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்தமேனியுடன் மஹரகம பிரதேசத்தில் பல பகுதிகளில் அழைந்து திரிந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டிய, பிட்டிகலயைச் சேர்ந்த 40 வயதுடைய இப்பெண், திருமணமானவர் எனவும் இவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மஹரகம இளைஞர் சேவை மன்றம், புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட, பிரதேசத்தின் பிரசித்திபெற்ற இடங்களிலேயே இப்பெண் பிறந்த மேனியுடன் அழைந்து திரிந்துள்ளார்.

இது தொடர்பில் மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அப்பெண் இருந்த இடத்துக்கு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுடன் சென்ற பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர்.

அப்பெண்ணைக் கைது செய்யும் போது, அவரது உடலில் சட்டையொன்று போர்த்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் அப்பெண்ணை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X