Princiya Dixci / 2016 ஜூன் 15 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெலியகொடை
7,000 கிலோகிராம் பாவனைக்கு உதவாத அரிசி மூட்டைகளை வைத்திருந்த சந்தேகநபர்கள் நால்வரை, பெலியகொடை - கண்டி வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள், ஊராபொல மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பெலியகொடைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா
கம்பஹா, விமானப் பாலத்தடிக்கு அருகாமையில் அமைந்துள்ள குறுக்கு வீதினூடாக கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரத்தில் மோதுண்டு சபுமல்உயன, நெதுன் கமுவப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞன், நேற்று செவ்வாய்க்கிழமை (14) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸை
ரத்மலானையிலிருந்து கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபரொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு 11.30க்கு உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
2 hours ago