2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'பில்டர் ரங்கா' கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல போதை வர்த்தகரும், பாதாள குழுத் தலைவருமான வெல்லே சுரங்கவுக்கு மிகவும் நெருக்கமான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெல்லே சுரங்க தனது சட்டவிரோத செயற்பாடுகளுக்காக முகத்தவாரம் கடற்கரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய இடத்தில் வைத்தே இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

“பில்டர் ரங்கா” என்றழைக்கபடும் ருக்ஷான் ராஜபக்ஷ என்ற சந்தேகநபரைக் கைதுசெய்யும் போது இவரிடம் இருந்து உள்நாட்டு தயாரிப்பான கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் இன்றைய தினம் (4) புதுக்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் முகத்துவார பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X