2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பெண்ணொருவர் கொலை –சந்தேகநபரின் சடலம் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரங்வல,மாலிபட பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் நேற்று (25) இரவு 7.15 மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,சந்தேகநபரது சடலம் கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 60 மீற்றர் தொலைவில் இருந்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள பெண் மாலிபட பிர​தேசத்தைச் சேர்ந்த 42 வயதான கமராலலாகே காந்தி ஹேமலதா என அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரினால் தாக்குதலுக்கு இலக்கான அவரது  4 மற்றும் 7 வயதான குழந்தைகள் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சடலமாக மீட்கப்பட்டுள்ள குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹிங்குல-மாலிபடை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .