Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான போலித் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில், களுபோவிலவைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரை குற்றப் புலனாய்வுத் துறையினர், குருணாகலில் வைத்துக் கைதுசெய்துள்ளனர்.
போலியான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதனூடாக வேண்டாத பிரச்சினைகளை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (28) மாலை 8.45 மணியளவில் குருணாகலில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, நாளை (29) காலையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்த, குற்றப் புலனாய்வுத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
4 hours ago
6 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
15 Nov 2025