2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மாணவியின் பிருட்டத்தைத் தட்டியவருக்கு மறியல்

Gavitha   / 2016 ஜூன் 05 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

பாடசாலை மாணவியொருவரின் பிருட்டத்தைத் தட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவர், கடந்த வியாழக்கிழமை (02) பிரத்தியேக வகுப்பை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் போது, இளைஞனொருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளார்.

அவ்வாறு பின் தொடர்ந்தவர் மாணவியின் பிருட்டத்தை தட்டியுள்ளார். அச்சமுற்ற மாணவி அந்தப் பகுதியில் வைத்து கூக்குரல் எழுப்பவே பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், குறித்த இளைஞனை துரத்திப்பிடித்து காத்தான்குடி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது  தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .